யாழ்.மாநகரசபை தேர்தலிற்கான பணிகளை இடைநிறுத்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுக்களை, ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முகமது லஃபார் தாஹீர் மற்றும் கே.பி.பிராணந்து ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் உத்தரவு இன்று செவ்வாய்க்கிழமை (01)பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 40 கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களில் தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட குழுக்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.
நாளை புதன்கிழமை (02) ஆம் திகதி வரை எந்த வித தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் லஃபார் தாஹீர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.