விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அரச காணிகளை முறைகேடாக விற்பனை செய்ய இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு இன்றைய தினம் (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்; தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதேவேளை இலஞ்சம் பெறுவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 25ம் திகதியன்று இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவால் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ள பிள்ளையான் -கருணா குழுக்களுடன் தேர்தல் ஒப்பந்தமொன்றை முன்னெடுத்த நிலையில் அடுத்த தினம் வியாழேந்திரன் கைதாகியிருந்தார்.