Home கொழும்பு வசந்த கரன்னாகொட – ஜகத் ஜெயசூரிய கொலையாளிகளே:சரத் பொன்சேகா!

வசந்த கரன்னாகொட – ஜகத் ஜெயசூரிய கொலையாளிகளே:சரத் பொன்சேகா!

by ilankai

இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிரான தடைகள் நியாயமானவை என, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வாவுக்கு எதிரான, ஐக்கிய இராச்சியத்தின் சமீபத்திய தடைகள் நியாயமற்றவையெனவும் தெரிவித்துள்ளார். 

உண்மையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களை மீறியதாக நிரூபிக்கப்பட்ட எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் போர் நடவடிக்கைகளின் போது மனித உரிமைகள் உட்பட எந்த சட்டங்களும் மீறப்படவில்லை . இலங்கை உள்நாட்டுப் போரின் முன்னணியில் சவேந்திர சில்வா இருந்தார். போரின் போது கொலைகள், மனித உரிமை மீறல்கள், தடுத்து வைக்கப்பட்டோரின் மரணங்கள் அல்லது அதிகார துஸ்பிரயோகம் எதுவும் நடக்கவில்லை. எனவே, சவேந்திர சில்வாவுக்கு எதிரான தடைகள் நியாயமற்றவை.

இருப்பினும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிரான தடைகள் நியாயமானவை . அந்த அதிகாரிகள் போரின் முன்னணியில் இல்லை என்று கூறிய அவர், அவர்கள் தங்கள் இராணுவ அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றது.

வசந்த கரன்னாகொட பல இளைஞர்களைக் கடத்தி, கப்பம் கோரி, திருகோணமலை முகாமில் தடுத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தங்களுக்குத் தெரியும் என்று முன்னாள் கடற்படைத் தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்,” என்றும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Related Articles