8
கிளிநொச்சி உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளில் புதிய கடலட்டை பண்ணைகள் வழங்கப்படுமென தெரிவித்து வாக்கு சேகரிப்பில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே துறைமுகங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி வடமராட்சியில் உள்ள இளைஞர்களை உள்ளுராட்சி தேர்தலுக்காக ஏமாற்றி வேலைவாங்கத் தொடங்கியுள்ளதாக மற்றொருபுறம் குற்றச்சாடடுக்கள் எழுந்துள்ளன.
முன்னதாக அங்கயன் இராமநாதன் வேலை வாய்ப்பு வழங்கவதாக கூறி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னராக வாக்களித்தவர்களை கைவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.அதே போன்றே தற்போது தேசிய மக்கள் சக்தியினர் வேலை வாய்ப்பு வீதி அபிவிருத்தியென பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது.