Home யாழ்ப்பாணம் நாலாவதாக சந்திரசேகரன் படையாம்??

நாலாவதாக சந்திரசேகரன் படையாம்??

by ilankai

இந்திய சினிமா பாணியிலான தேர்தல் பரப்புகைளில் ஜேவிபி களமிறங்கியுள்ளது.ஜேவிபியின் வளங்குறைந்த அமைச்சரான சந்திரசேகரன் மற்றும் அவரது அல்லக்கை இளங்குமரன் இருவரதும் கூத்துக்கள் நாள் தோறும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறிவருகின்றது.

இந்நிலையில் வடக்கில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றப்போவதாக சொல்லிவரும் ஜேவிபியினர் இன்று யாழ்.பேரூந்து நிலையத்தில் கழுவி பெருக்கும் நடவடிக்கையில் குதித்தனர்.

ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச்சபை பணியாளர்கள் அங்கயன் அணி,டக்ளஸ் அணி ,நாமல் அணியென பல அணிகளாக முட்டிமோதிவருகின்றன.

இந்நிலையில் தற்போது புதிதாக சந்திரசேகரன் அணியென ஒரு அணி முளைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசபை தவிசாளர் நிரோஸ் அரசாங்கம் இராணுவமயமாக்கத்தினை மேலும் வடக்கில் வலுப்படுத்துகின்றது. இன்று யாழ் மாநகர சபை ஊடாக தூய்மிக்கப்பட வேண்டிய மத்திய பேருந்து நிலையத்தினை இராணுவத்தை அழைத்து  பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்  மேற்கொண்டுள்ளார். அடிப்படையில் மாநகரசபையில் போதிய வளங்கள் உள்ளன. ஆளுநர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக உள்ளுராட்சி மன்றங்களின் விடயதானங்களில் தலையீட்டைக்கொண்டுள்ளார். மேலும் மாநகரசபை ஆணையாளர் அரச உத்தியோகத்தர்களாக உள்ளார். இவ்வாறாக சாதாரண சிவில் அதிகாரிகளால் பணிக்கப்பட்டு மாநகரசபை பணியாளர்களையும் வளங்களையும் ஈடுபடுத்தி சிரமதானமாக பாராளுமன்ற உறுப்பினரும் மக்களும் பணி செய்வதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி சாதாரண விடயங்களிலும் சிவில் நிர்வாக விடயங்களை முடக்கி இராணுவ தலையீட்டையும் பிரசன்னத்தினையும் அதிகரிக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Articles