12
கொழும்பில் ஒன்று : வடக்கில் ஒன்று
பிரித்தானியாவின் போர்க்குற்றவாளிகளிற்கான தடை தொடர்பில் அனுர அரசு கடும் கண்டனத்தை எழுப்பிவருகின்றது.
இந்நிலையில் அனுர அரசின் பங்காளியாகவும் வரவு செலவுத்திட்டத்தை வரவேற்றவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஒரு பேச்சும் வடக்கில் இன்னொரு பேச்சும் பேசுகின்ற டெலோ தலைமையென அண்மையில் அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.