Home இலங்கை வடமராட்சி கிழக்கில் வாள் வெட்டு – குடும்பஸ்தர் படுகாயம்

வடமராட்சி கிழக்கில் வாள் வெட்டு – குடும்பஸ்தர் படுகாயம்

by ilankai

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆழியவளை பகுதியில் உள்ள குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி உள் நுழைந்த வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த உடைமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles