Home மன்னார் தலைமன்னாரில் 124 கிலோ கஞ்சா மீட்பு

தலைமன்னாரில் 124 கிலோ கஞ்சா மீட்பு

by ilankai

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். 

தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கப்பல் ரோந்து குழுவை நிலைநிறுத்தி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது. 

இதன் போது குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 46 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோ 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றினர். 

இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என தெரியவருகின்றது. 

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Articles