யாழில் ஊடகங்களிற்கு வகுப்பெடுக்க முற்பட்ட சந்திரசேகரனின் அல்லக்கை இளங்குமரன் இறுதியில் மன்னிப்பு கோரிய பரிதாபம் நடந்துள்ளது.
இனிமேல் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் உரையாற்றிய போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.
மின்சார மற்றும் சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி யாழ்ப்பாணத்தில் மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என உறுதியளித்து உரையாற்றிய பின்னர், குறுகிய மின்வெட்டு ஏற்பட்டது.
இந்த சம்பவம், இன்று மாலை, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தேசிய புலமையாளர் அமைப்பின் பொறியியல் பிரிவு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலின் போது நடைபெற்றது.
மின்வெட்டு ஏற்பட்ட நேரத்தில், டிஜிட்டல் பொருளாதாரப் பிரதியமைச்சர் இரங்க வீரரத்ன உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்த தற்காலிக மின்வெட்டு நிகழ்வை சற்றே பாதித்த போதிலும், பிறகு மின் வழங்கல் மீண்டும் வழமைக்கு வந்தது.
யாழ்ப்பாணம் மின்சார சபையின் அலுவலகம், இன்று மாலை யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் குறுகிய மின்வெட்டு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில், மின்சார மற்றும் சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, மீன்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், டிஜிட்டல் பொருளாதாரப் பிரதியமைச்சர் இரங்க வீரரத்ன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித் கொடிதுவக்கு, பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் மற்றும் தேசிய புலமையாளர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலித் சமரசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் நிகழ்வில் மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களை இளங்குமரன் மிரட்டியுள்ளார்.
எனினும் பின்னர் அமைச்சர்களது ஆலோசனையில் மன்னிப்பு கோரியுள்ளார்.