Home இலங்கை போதையில் சாரத்தியம் – வாழ்நாள் தடை

போதையில் சாரத்தியம் – வாழ்நாள் தடை

by ilankai

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய உத்தரவிட்ட பாணந்துறை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ 40 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளார்.

தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டபோது, சாரதி மது போதையில் இருந்தமையை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முற்பட்டமை , போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றில் சாரதியை  பொலிஸார் முற்படுத்தினர். 

அதனை அடுத்து, வழக்கினை விசாரித்த நீதவான், சாரதியை கடுமையாக எச்சரித்த பின் , சாரதி அனுமதி பத்திரத்தை வாழ் நாள் பூராக தடை செய்ததுடன் , 40 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தார். 

Related Articles