புற்றுநோய் சிகிச்சையின் போது தற்காலிக பக்க விளைவுகளை சந்தித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் நேற்று வியாழக்கிழமை மருத்துவமனையில் சிறிது நேரம் கழித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னர் கிளாரன்ஸ் மாளிகைக்குத் திரும்பினார். அங்கே அவர் அரசு ஆவணங்களில் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை பேர்மிங்காம் செல்வதற்கான சுற்றுப்பயணத்தை அவர் இரத்து செய்துள்ளார். திட்டமிடப்பட்ட நான்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருந்தார்.
நேற்று வியாழக்கிழமை மூன்று தூதர்களுடனான சந்திப்புகளும் பாதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவரது பக்க விளைவுகள் என்ன என்பது குறித்து அரண்மனை கூடுதல் தகவல்களை வழங்கவில்லை.
நேற்று வியாழக்கிழமை வடக்கு லண்டனில் உள்ள வெம்ப்லியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இராணி கமிலா கலந்து கொண்டார்.