Home இலங்கை புத்தாண்டை முன்னிட்டு 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி!

புத்தாண்டை முன்னிட்டு 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி!

by ilankai

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன இதனை தெரிவித்தார்.

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த டைபாய்டு காய்ச்சல் பரவல் மற்றும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.

மேலும் கடந்த காலங்களில் டைபாய்டு தொற்று பரவல் சமூகத்தில் அதிகரிப்பதற்கு உணவுப்பொருள் தயாரிப்பு முறை மற்றும் விற்பனை ஆகிய பிரதான காரணங்களாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால் இத்துறையில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் உள்ள 358 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்கமைய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles