Home இலங்கை அநுராதபுரத்தில் பிக்கு கொலை – சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது

அநுராதபுரத்தில் பிக்கு கொலை – சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது

by ilankai

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு மடத்தில் வசித்து வந்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கட்டுநாயக்க பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரின் தொலைபேசித் தரவை பகுப்பாய்வு செய்த போது கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சமீபத்தில் அனுராதபுரம், எப்பாவல, கிரலோகம பிரதேசத்தில் உள்ள மடம் வசித்து வந்த பிக்கு ஒருவர் அந்த விகாரையில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். 

கொலை செய்யப்பட்ட நபர் கிரலோகமவில் உள்ள ருக்சேவன மடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றிய 69 வயதான விலச்சியே பிரேமரத்ன தேரர் ஆவார். 

அவரது உடலின் பல பகுதிகளில் கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. 

இதேவேளை, எப்பாவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் காணியொன்றில், கைவிடப்பட்ட நிலையில் பிக்குவுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியை பொலிஸார் கண்டுபிடித்த நிலையில் , அதன் சாரதியை பொலிஸார் தேடி வந்தனர்.

அந்நிலையில், காணாமல் போனவரின் தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய அவர் கட்டுநாயக்க பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​கொலை செய்யப்பட்ட பிக்குவுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தான் கொலையைச் செய்தவிட்டு, தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Articles