Home மத்தியகிழக்கு ஹமாஸுக்கு எதிராக காசாவில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

ஹமாஸுக்கு எதிராக காசாவில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

by ilankai

காசாவில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஹமாஸ் எதிர்ப்புப் போராட்டங்களில் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இஸ்ரேலுடனான போரை நிறுத்தக் கோரி போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸுக்கு எதிரான போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு காசாவின் பெய்ட் லஹியா நகரத்தில் தொடங்கியது. அங்கு சுமார் 3,000 பேர் கூடியிருந்தனர். பலர் ஹமாஸின் வீழ்ச்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று கோஷமிட்டனர் ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

போரின் போது வடக்கு காசா குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பெரும்பாலான உள்கட்டமைப்புகள் இடிந்து விழுந்து ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடுமையாக பாதிக்கப்பட்ட காசா நகரத்தின் ஷிஜையா பகுதியில், டஜன் கணக்கான ஆண்கள் வெளியேறு, வெளியேறு! ஹமாஸ் வெளியேறு!” என்று கோஷமிட்டதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

காசா நகரில் போராட்டக்காரர்கள் ஹமாஸ் எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நீடித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னர் இஸ்ரேலிய இராணுவம் தனது குண்டுவீச்சு வீச்சைத் தொடங்கியது. இதில் 500 மேற்பட்ட மக்கள் கடந்த சில நாட்களில் கொல்லப்பட்டனர்.

Related Articles