Home கிளிநொச்சி பூநகரிக்கும் மே 6- தேர்தல்!

பூநகரிக்கும் மே 6- தேர்தல்!

by ilankai

பூநகரி பிரதேச சபை மற்றும்  மன்னார் பிரதேச சபை உள்ளிட்ட மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு, மே மாதம் 6ஆம் திகதியன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பூநகரி பிரதேசசபைக்கு 9 கட்சி மற்றும் குழுக்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன.

இதனிடையே உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு  வர்த்தமானி அறிவிப்பை, இன்று வியாழக்கிழமை (27) வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு வேட்பாளர், வாக்காளர் ஒருவருக்காக  74  ரூபாய் முதல் 160 ரூபாய்க்கு இடைப்பட்ட தொகையை செலவழிக்கலாம். தேர்தல்கள் நடைபெற உள்ள 366 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களின் போது லஞ்சம் அல்லது பரிசுகள் மூலம் வாக்குகளைப் பெறுவதைத் தடுக்க, ஆணைக்குழு தனதுக்கு உள்ள அதிகாரங்களுக்குள் அத்தகைய  நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பும்  மே 6 ஆம் திகதி நடைபெறுமெனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles