Home கிளிநொச்சி கிளிநொச்சியில் பெருமளவான பனைகள் அழிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சியில் பெருமளவான பனைகள் அழிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

by ilankai

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாகக் காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காகச் சிலர் பனை மரங்களை அழிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நூற்றுக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டதால் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பனை அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அதிகாரமிக்க தரப்பினரிடம் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையில் எந்தவித மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

நடவடிக்கைகளையும் எனவே அதிகாரிகள், குறித்த பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இயக்கச்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles