Home யாழ்ப்பாணம் சந்திரசேகரன் அணிக்கும் கதிரை வேண்டுமாம்!

சந்திரசேகரன் அணிக்கும் கதிரை வேண்டுமாம்!

by ilankai

தமிழகத்திலிருந்து  வருகை தந்துள்ள இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தையில் தம்மையும் இணைத்துக்கொள்ளவேண்டுமென தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனது ஆதரவு கடற்றொழில் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

அத்துடன் பேச்சவார்த்தைகளை யாழ்.மாவட்டத்திலேயே நடாத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனங்களின் சமாச அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் முதல் தமிழக  கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்குமிடையே சந்திப்பு வவுனியாவில் நடைபெற்றுவருகின்றது.

அத்தகைய சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தே சந்திரசேகரன் ஆதரவு கடற்றொழிலாளர்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, தற்போது வருகை தந்துள்ள தமிழக கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடைய பேச்சு வார்த்தை நீதியற்றதும் , நியாயமற்றதுமாக காணப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

Related Articles