Home இலங்கை விகாரைக்குள்படுகொலை செய்யப்பட்ட பிக்கு

விகாரைக்குள்படுகொலை செய்யப்பட்ட பிக்கு

by ilankai

அனுராதப்புரம் -எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில் வசித்து வந்த 69 வயது பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

உயிரிழந்த பிக்குவை சந்திப்பதற்காக வந்த நபரொருவரும் மற்றும் வேறொரு விகாரையைச் சேர்ந்த பிக்குவும் இந்தக் கொலையைக் கண்டு பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் அளித்ததாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று ஜோடி காலணிகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை மேலதிக விசாரணைக்காக பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை பிக்குவிற்கு முச்சக்கர வண்டி ஒன்றும் அதற்கான சாரதி ஒருவரும் இருந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டியும் அதன் சாரதியும் தற்போது மடாலயத்தில் இல்லை என்பதால் அது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  

Related Articles