Home யாழ்ப்பாணம் வாயை மூடடா:தெறிக்கும் அதிகாரம்?

வாயை மூடடா:தெறிக்கும் அதிகாரம்?

by ilankai

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களது சண்டை சச்சரவுகளால் இன்று இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

இதனிடையே தேசிய மக்கள் சக்தி தனது கையலாகாத தனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாத நிலையே காணப்படுவதாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடயத்தை முன்னிறுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் இடையில் நின்று போயிருந்தது.

ஆளும் தரப்பு  நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும்; அர்ச்சுனா  ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது.

இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றியமை, நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் குடும்பச் சண்டையிட்டனர்.

இந்நிலையில் மோதலை இடை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.

ஆனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தார். 

ஒருங்கிணைப்பு குழு தலைவரின் ஆளுமையற்ற நிலையை குற்றஞ்சாட்டி சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

எனினும் இறுதியில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சந்திரசேகரன் சக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை வாயை மூடச்சொல்லி எச்சரித்ததையடுத்து அமைதி நிலை தோன்றியது.

Related Articles