முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னதாக மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் கூட்டமைப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனுடன் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் (கருணா அம்மான்) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.
ராஜபக்சக்களது விசுவாசிகளாகவும் எடுபிடிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மூவர் கூட்டமைத்துள்ள நிலையில் வியாழேந்திரன் சட்டவிரோத மணல் விற்பனைக்கான இலஞ்ச குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.