Home முதன்மைச் செய்திகள் யேர்மனியில் பயணி ஒருவர் தொடருந்தில் 15 ஆயிரம் யூரோக்களைக் கண்டெடுத்தார்

யேர்மனியில் பயணி ஒருவர் தொடருந்தில் 15 ஆயிரம் யூரோக்களைக் கண்டெடுத்தார்

by ilankai

யேர்மனி ஹனோவரில் இருந்து மியூனிக் செல்லும் ICE தொடருந்தில் பயணித்த பயணி 15,000 யூரோக்கள் பணத்தைக் கண்டெடுத்தார். பின்னர் 33 வயதான பெண் பயணி காவல்துறையைத் தொடர்பு கொண்டு பணத்தை காவல்துறையினரிடம் கையளித்தார் என காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒரு இருக்கையில் இருந்த பையில் பணத்தைக் கண்டுபிடித்ததாக அவள் சொன்னாள். அந்தப் பை எவ்வளவு நேரம் அங்கே இருந்தது அல்லது யாராவது முன்பு இருக்கையில் அமர்ந்திருந்தார்களா? என்பது புலனாய்வாளர்களுக்குத் தெரியாது. முனிச்சில் கடைசி தொடருந்து நிறுத்தத்தில் காவல்துறை அதிகாரிகள் பையை எடுத்து பணத்தை எண்ணத் தொடங்கினர்.

இதுவரை இந்தப் பணத்திற்கு எவரும் உரிமை கோரவில்லை. பணத்தை யார் கண்டுபிடித்தாரோ அவருக்கே சட்டபூர்வமாக பணம் உரித்துடையது. இருப்பினும் பணம் காவல்துறையே வைத்திருக்கிறது.

பணத்தைக் கண்டுபிடித்தவருக்கு குறித்த பணத்தொகையில் மூன்று சதவீதமான 450 யூரோக்கள் பெற உரிமை பெறுவார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Articles