12
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் குழந்தை ஒன்று குளிர்பானம் என நினைத்து போத்தலில் இருந்து டீசலைத் தவறுதாகக் குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, ஆனால் சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிற்சை பலனின்றி குழந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) உயிரிழந்தது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் உள்ள நாரந்தனை பகுதியைச் சேர்ந்த ஒரு வயது ஒன்பது மாதக் குழந்தை ஆவார்.
வீட்டில் இருந்த டீசல் போத்தலை குளிர்பானம் என்று தவறாக நினைத்து குழந்தை குடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஊர்காவற்றுறைக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.