Home கிளிநொச்சி பூநகரி வேட்புமனுக்கள் ஏற்பு?

பூநகரி வேட்புமனுக்கள் ஏற்பு?

by ilankai

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 336 உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது.

இம்மாதம் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் மூன்று பிரதேச சபைகளில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் நாளை மறுதினம்(26) நண்பகல் 12 மணியுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது நிராகரிக்கப்பட்ட யாழ்.மாநகரசபை உள்ளிட்ட சபைகளில் வேட்புமனுக்களை ஏற்க வலியுறுத்தி வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles