Home இலங்கை இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

by ilankai

இலங்கையில் எலான் மஸ்கின்  “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றின்  பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்ய இந்த இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

“ஸ்டார்லிங்க்” இணையதள சேவையை சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு எலான் மஸ்கின்  “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியது.

“ஸ்டார்லிங்க்” இணைய சேவையின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழக்காது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

Related Articles