15
இலங்கையில் குற்றச்செயல்கள் முனைப்படைந்துவருகின்ற நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இன்று (23) வரை 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம, அஹங்கல்ல, தெவிநுவர, கல்கிஸ்ஸ, தொடங்கொட, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொட்டாஞ்சேனை, மினுவங்கொட, மித்தெனிய, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம, அம்பலாங்கொட, தெவுந்தர உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
பாதாள உலக கும்பல்களது நடவடிக்கை காரணமாக தெற்கில் பதற்றம் நிலவுகின்ற போதும் வடக்கிலோ கிழக்கிலோ அமைதி நிலையே காணப்படுகின்றது.