Home இலங்கை இரவு விடுதியில் மோதல் யோஷிதவின் கும்பலை தேடும் பொலிஸார்

இரவு விடுதியில் மோதல் யோஷிதவின் கும்பலை தேடும் பொலிஸார்

by ilankai

இரவு விடுதியில் மோதல் யோஷிதவின் கும்பலை தேடும் பொலிஸார்

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யோஷித ராஜபக்ஷவுடன் வந்த ஒரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தின் சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தற்போது அவர்கள் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள்  நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles