Home யாழ்ப்பாணம் யாழில். நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழில். நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

by ilankai

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இணுவில் பகுதியை சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) எனும் இளைஞனே , உயிரிழந்துள்ளார். 

இணுவில் பகுதியை சேர்ந்த 14 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று மாதகல் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.  இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை பாரிய அலை ஒன்று எழுந்ததால் , இளைஞன் ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்டார். 

கடலில் அடித்து செல்லப்பட்ட இளைஞனை , கூட சென்ற இளைஞர்கள் , அப்பகுதி கடற்தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் தேடிய போதிலும் , இளைஞனை மீட்க முடியவில்லை. 

இந்நிலையில் மாலை குறித்த இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Articles