ராஜபக்சக்களது பணிப்பில் பாதாள உலகை கும்பலை வைத்து கொலைகளை முன்னெடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தும்பர சிறைச்சாலை அதிகாரிகளிடம், வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு, தேசபந்து தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியாயமான காரணங்களை முன்வைக்கப்படும் பட்சத்தில், தடுப்புக் கைதிகள் வெளியில் இருந்து உணவு கோர உரிமை உண்டு என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தற்போது பல்லேகலை, தும்பர சிறைச்சாலையில் உள்ள ஒரு பாதுகாப்பான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இவ்வாறு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.