Home யாழ்ப்பாணம் யாழில். 17 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சி அமைக்கும்

யாழில். 17 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சி அமைக்கும்

by ilankai

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஒரு மித்த வெற்றியை பெற்று அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைக்கும் என யாழ் . மாநகர சபையின் முதல்வர் வேட்பாளரான யாழ்,பல்கலைக்கழக விரிவுரையாளர் ச. கபிலன் தெரிவித்துள்ளார். 

யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் 17 சபைகளிலும் வேட்பு மனுக்களை கையளித்தனர். அவற்றில் எவையும் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே நாம் 17 சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று சபைகளில் ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார்

Related Articles