சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்படாமல் பணிக்கு சமூகமளிக்கத் தவறியதற்காக சிறீலங்கா முப்படைகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டாவின் உத்தரவைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாக பதவி விலகாமல் சேவையிலிருந்து தப்பி ஓடிய முப்படையினரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பிப்ரவரி 22 அன்று தொடங்கப்பட்டன.
நேற்று (19) நிலவரப்படி, 1,604 தப்பியோடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,444 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 160 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 1,394 பேர் இராணுவ வீரர்கள், 138 பேர் விமானப்படை வீரர்கள் மற்றும் 72 பேர் கடற்படை வீரர்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.