Home யாழ்ப்பாணம் யாழில். பிடியாணை உத்தரவை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

யாழில். பிடியாணை உத்தரவை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

by ilankai

யாழ்ப்பாணத்தில், நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தரை சந்தேகநபர் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். 

சந்தேகநபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் பதுங்கியுள்ள இடம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை சந்தேகநபர் தடியினால் மூர்க்க தனமாக தாக்கி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , தாக்குதலாளியை கைது செய்வதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

Related Articles