Home இலங்கை தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரண்

தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரண்

by ilankai

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 19 நாட்களின் பின்னர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்றைய தினம் புதன்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை  உத்தரவை அமல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து இருந்தது.

அதன்படி, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. 

இந்நிலையில், தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் பகுதியில் உள்ள உணவகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத நிலையிலையே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Related Articles