தம்மை மட்டுமே தூயவர்களாக காண்பித்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தற்பேர்து ஏனைய தரப்புக்களுடன் கூட்டு சேர முன்வந்திருப்பதால் தமது நிலைப்பாட்டை மீள பரிசீலித்துள்ளதாக தமிழரசுக்கட்சி பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் புதன்கிழமை (19) தாக்கல் செய்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்புமனுக்கள் புதன்கிழமை (19) மாலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது பல்வேறு கட்சிகளையும் இணைத்து புதிய ஒரு கூட்டணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிட உள்ளது.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி இன்றைய தினம் ஜந்து சபைகளிற்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தூய தமிழ் தேசிய மக்கள் முன்னணி பருத்து கருத்து வெளியிட்டிரந்தார்.
இதனிடையே இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.