ஆபிரிக்காவில் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 ஆயுதக் குழு இன்று செவ்வாய்க்கிழமை அங்கோலாவில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
நாட்டின் கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக M23 கிளர்ச்சியாளர்கள் காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர்.
ஆனால் M23 குழுவை உள்ளடக்கிய கிளர்ச்சிக் குழுக்களின் காங்கோ நதி கூட்டணி, M23 மற்றும் ருவாண்டா அதிகாரிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சனிக்கிழமை விதித்த தடைகள் காரணமாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாகக் கூறியது.
ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று கிளர்ச்சிக் குழு கூட்டணி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ருவாண்டாவும் அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பெல்ஜியத்துடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிப்பதாகக் கூறியது. ஐரோப்பிய ஒன்றயம் அதன் நவ-காலனித்துவ மாயைகளைத் தக்கவைக்க” முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியது.
ருவாண்டாவின் எல்லைக்கு அருகில் உள்ள கனிம வளம் மிக்க கிழக்கு காங்கோவில் காலூன்றுவதற்காகப் போராடி வரும் சுமார் 100 ஆயுதக் குழுக்களில் M23 ஒன்றாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் M23 தனது சண்டையை தீவிரப்படுத்தியது. இந்த ஆண்டு சண்டை தீவிரமடைந்ததிலிருந்து, கிளர்ச்சியாளர் குழு கிழக்கு காங்கோவில் இரண்டு பெரிய நகரங்களைக் கைப்பற்றியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த சண்டை ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது மற்றும் லட்சக்கணக்கானவர்களை இடம்பெயர்த்துள்ளது.