காசா மீது இரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 404 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 404 பேர் கொல்லப்பட்டதாக டெலிகிராமில் ஒரு பதிவில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் வாட்ஸ்அப் சேனலில், அது 413 என்ற சற்று அதிக எண்ணிக்கையைக் கூறியுள்ளது.
சில பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அமைச்சகம் மேலும் கூறுகிறது.
இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அமைச்சகத் தலைவர் முகமது ஜாகுத் கூறியதாக ஏஎவ்பி செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது.
மேலும் 660 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் டஜன் கணக்கானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.தாக்குதலானது அதிகாலை 2 மணியளவில் தொடங்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன.
காசாவில் நடந்த படுகொலைகளுக்கு அமெரிக்கா “முழுப் பொறுப்பையும் ஏற்கிறது” என்று ஹமாஸ் புதிதாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புனித ரமலான் மாதம் என்பதால், பலர் விடியற்காலையில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, காசாவில் வெடிப்புகள் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
20க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்கள் பறந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் விமானங்கள் காசா நகரம், ரஃபா மற்றும் கான் யூனிஸில் உள்ள இலக்குகளைத் தாக்கத் தொடங்கின.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.