கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ்ப்பாண மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது.
காணாமல் போயுள்ள யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் நடைபெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களம் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
குருநகரை சேர்ந்த 46 வயதான விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதான பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்றுறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர்.
இந்திய தீவக கடற்பகுதியில் அவர்கள் காணாமல் போயுள்ள அதே காலப்பகுதியில் கச்சதீவு உற்சவம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.