இந்தியாவின் நாக்பூரில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசரின் கல்லறை தொடர்பாக ஏற்பட்ட வன்முறை மோதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் இன்ற செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
முன்னாள் முஸ்லிம் ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து தேசியவாதக் குழு நடத்திய போராட்டங்களின் போது இந்த மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது .
தேசியவாத விஸ்வ இந்து பரிஷத் (VHP) குழுவைச் சேர்ந்த இந்து போராட்டக்காரர்கள் ஔரங்கசீப்பின் உருவப்படத்திற்கு தீ வைத்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.
முகமூடி அணிந்து கூர்மையான ஆயுதங்கள் மற்றும் போத்தல்களை ஏந்திய முஸ்லிம் குழுக்களைச் சேர்ந்த பலர், காவல்துறையினர் மீது கற்களை வீசியதாக ஒரு காவல்துறை அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பின்னர் வன்முறைக் குழுக்கள் வாகனங்களை எரித்தும், வீடுகளை சேதப்படுத்தியும் நிலைமை மோசமடைந்ததாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்தது 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாக்பூருக்கு மேற்கே 450 கிலோமீட்டர் (280 மைல்) தொலைவில் உள்ள அவுரங்காபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.