Home யாழ்ப்பாணம் அநாதரவான உடலம் மீட்பு!

அநாதரவான உடலம் மீட்பு!

by ilankai

அநாதரவான உடலம் மீட்பு!

வடமராட்சியின் கரணவாய் புறப்பொறுக்கி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கரணவாய் புறப்பொறுக்கி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக உள்ள சேவிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக் காணிக்குள் இருந்தே இன்று செவ்வாய்க்கிழமை சற்று முன்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் இறந்து சுமார் இரு நாட்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles