Home இலங்கை முன்னாள் அமைச்சர் காஞ்சன தலைமையில் உதயமாகிறது புதிய கட்சி!

முன்னாள் அமைச்சர் காஞ்சன தலைமையில் உதயமாகிறது புதிய கட்சி!

by ilankai

முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது. 

இந்த அரசியல் கட்சியில், பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளனர்.

இது தொடர்பான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கட்சியின் புதிய சின்னம் மற்றும் பெயர் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படவுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதால் அதனை சீர்செய்ய நீண்டகாலம் தேவைப்படும் என்பதாலும், அரசியலில் ஈடுபட நிரந்தர தளம் ஒன்று தேவை என்பதாலும் இந்த புதிய அரசியல் கட்சியை உருவாக்க உத்தேசித்ததாக அந்த செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் முன்னாள் எம்.பி. ஒருவர் தெரிவித்தார். 

இந்தப் புதிய அரசியல் கட்சியில் புதிய முகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles