Home இந்தியா சான்று கையளிப்பு:அத்துமீறல்கள் தொடர்பில்…

சான்று கையளிப்பு:அத்துமீறல்கள் தொடர்பில்…

by ilankai

இலங்கை கடற்பரப்பினுள் தமது அத்துமீறல்களை தமிழக அரசு தொடர்ந்தும் மறுதலித்தே வருகின்றது.

இந்நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இன்று(17) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அம்பலப்படுத்தும் காணொலி ஆதாரங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles