“தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில், இந்திய தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் கூட்டத்தின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
“சிறிலங்கா விடயத்தில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வான 13வது திருத்த சட்டம் என்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. நீங்கள் விரும்பினால், இவ்விடயமாக டெல்கியில் கதைத்து உறுதிப்படுத்தலாமெனவும் கூறியிருந்தார்.
அரின்டம் பாக்ஜீ , சிறிலங்காவில் 2014ம் முதல் 2018 ஆண்டுவரை இந்தியாவின் துணை தூதுவராக கடமையாற்றியதுடன், இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளராக மூன்று வருடங்கள் கடமையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தில் சிறிலங்காவின் தூதுவர் திருமதி கிமாலி அருணதிலாக உட்பட, மண்டபம் நிறைந்த ராஜதந்திரிகள், தமிழ் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.