19
மோடி வரார்:அதானி வரார் முன்னாலே!
உள்ளுராட்சி தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளதான அறிவிப்பின் மத்தியில் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று (15) வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அதானியின் காற்றாலை ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்வதாக ஏற்கனவே இலங்கை அரசு அறிவித்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.