Home மட்டக்களப்பு மது அருந்த சென்ற வேளை தர்க்கம் – நண்பர்கள் தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு

மது அருந்த சென்ற வேளை தர்க்கம் – நண்பர்கள் தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு

by ilankai

மது அருந்தச் சென்ற இடத்தில் ஏற்பட்ட தர்க்கத்தில் நண்பனை தாக்கி கொலை செய்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெல்லாவௌி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அப்பகுதியை சேர்ந்த புவனேந்திராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் வெளியில் நான்கு பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். அதன் போது , உயிரிழந்த நபருக்கும் ஏனைய மூவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் , மூவரும் இணைந்து தாக்கியதில் அந்நபர் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

Related Articles