Home யாழ்ப்பாணம் கச்ச தீவு திருவிழா நிறைவு

கச்ச தீவு திருவிழா நிறைவு

by ilankai

கச்ச தீவு திருவிழா நிறைவு

ஆதீரா Saturday, March 15, 2025 யாழ்ப்பாணம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றது.

இன்றைய தினம் சனிக்கிழமை, காலை 6 மணிக்கு திருச்செபமாலை ஆரம்பமாகி, யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருநாள் திருப்பலி இடம்பெற்று, திருவிழா நிறைவடைந்தது.

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles