இலங்கை அரசினால் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள பூரண பௌர்ணமி நாளில் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியை நையாண்டி செய்துவருகின்றன ஏனைய தரப்புக்கள்.
நேற்றைய தினமான வியாழக்கிழமை பௌத்த விகாரைகளில் வழிபாடுகள் பௌர்ணமி நாளில் முன்னெடுக்கப்படுவதுடன் ழுழு அளவில் விடுமுறை அரச தனியார் துறைகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை விடுமுறை நாளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஏற்கனவே தேர்தல் திணைக்களத்தினால் விடுமுறை நாட்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யமுடியாதென அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் அரச விடுமுறை நாள் தொடர்பில் தெரியாத அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமா யாழில் உள்ளனர் என ஏனைய தரப்புக்கள் நையாண்டி செய்துவருகின்றன.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த போது அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் வைத்தியர் சிறீபவானந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் வருகை தந்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.
எனினும் இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியினர் வேட்பமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.