Home யாழ்ப்பாணம் கிருஸ்ணாவிற்கு கோவிந்தா?

கிருஸ்ணாவிற்கு கோவிந்தா?

by ilankai

புலம்பெயர் தமிழர்களது நிதி மோசடி மூலம் கோடீஸ்வரராகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவும் இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்டவருமான யூரியூபர் கிருஸ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

மல்லாகம் நீதிமன்றத்தினால் பிணை மறுக்கும் உத்தரவானது இன்று (14) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஸ்ணாவின் வழக்கு, மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டத்தரணி திருக்குமரனால் முன்வைக்கப்பட்டிருந்தது.பிணைக்கு அனுமதி கோரியே நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு வழக்கு முன்கூட்டியே எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கோடிக்கணக்கில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் சமூக மட்டத்தில் சர்ச்சைகள் தொடர்கின்றன.

இந்நிலையில் அவரது செயற்பாடுகள் சர்ச்சைக்குரிய நிலையிலும் பல நிதி மோசடி குற்றச்சாட்டுகளுடன் இருப்பதாலும் பிணை மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related Articles