மூதூர், தாஹா நகரில் உள்ள வீடொன்றில் தமிழ் சகோதரிகளான பாட்டிகள் இருவரை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுமி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மூதூர் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த காவல்துறையினர், கொலைகளைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இறந்த பெண்களின் பேத்தி என்று கூறப்படும் சிறுமியை தற்போது காவலில் எடுத்துள்ளனர்.
முன்னதாக திருகோணமலை – மூதூர் பகுதியில் பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களுள் ஒருவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருபவர் எனவும் சிறிதரன் ராஜேஸ்வரி (68 வயது) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74 வயது) ஆகிய இருவரே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் 15 வயது மகள் வெட்டுகாயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.