Home யாழ்ப்பாணம் தேர்தலின் பின்னரே கூட்டு

தேர்தலின் பின்னரே கூட்டு

by ilankai

தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினால இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

எவ்வாறாயினும்,தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் எந்தக் கட்சியுடன் இணைவது என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Articles