யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் கைப்பற்றுமென சாத்திரம் சொல்லியுள்ளார் சந்திரசேகரன்.
இந்நிலையில் வலிகாமம் வடக்கில் பல விடுவிக்கக்கூடிய சாத்தியப்பாடான இடங்களை விடுவிப்பதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லை. விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பலாலி அம்மன் கோவில் விடுவிக்கப்படவில்லை. தடைகளுடனேயே சென்று வர அனுமதிக்கப்படுகின்றது.
மயிலிட்டி காணிக்கை மாதா கோவில் அதன் அருகில் உள்ள பாடசாலை பிரதான வீதிக்கு அருகில் இருந்தும் கூட இன்னமும் விடுவிக்கப்படவில்லை. யாழ் பலாலி வீதி, தெல்லிப்பளை அச்சுவேலி வீதி, கே.கே.எஸ் கீரிமலை வீதி போன்ற வீதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
காங்கேசன்துறை சிறுவர் பூங்கா அதற்குரிய பாதை முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மயிலிட்டி துறைமுகப் பகதிகளில் இருந்து பலாலி வடக்கு வரையான கடற்கரை பகுதி இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
கட்டுவன் சந்தி – குரும்பசிட்டி பகுதியில் உள்ள காணிகள் விடுவிக்ககூடிய நிலை இருந்தும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் வலிகாமம் வடக்கை விடுவித்து விட்டதாக பொய் பிரச்சாரங்ககளை முடுக்கியுள்ளது அனுர அரசு என மக்கள் கொதித்துள்ளனர்.