Home கிளிநொச்சி உச்சத்தில் குழப்பம்:பிளவு இல்லையெனும் சீவீகே!

உச்சத்தில் குழப்பம்:பிளவு இல்லையெனும் சீவீகே!

by ilankai

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்கள் தெரிவில் தமிழரசுக்கட்சி பாரிய பிளவை சந்தித்துள்ளது.எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு அணி மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆதரவு அணியென பிளவுண்டு கிளிநொச்சி மற்றும் கிழக்கில் தனித்தனி வேடபாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு குழப்ப நிலை தோன்றியுள்ளது.

இதனிடையே இலங்கை தமிழரசுக்கட்சியை உடைத்து புதிய தமிழரசுக்கட்சியொன்றை உருவாக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக வெளியான செய்தியை அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் முற்றாக மறுத்துள்ளார்.

சமீபத்தில், புதிய தமிழரசுக்கட்சியை உருவாக்க தாயகத்திலுள்ள – புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தோடு, அதற்கு தமிழரசுக் கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இதற்கு உள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவ்வாறாதொரு பின்னணியில், புதிதாக உருவெடுத்துள்ள சர்ச்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சி.வீ.கே.சிவஞானம் இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்டவர்களென தெரிவிக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தான் பேசியதாகவும் அவர்கள் எவருக்கும் அவ்வாறான ஒரு எண்ணம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களிடையே இருக்கும் ஒரே ஒரு பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியை திட்டமிட்டு உடைப்பதற்காக பொய்கள் புனையப்படுவதாகவும் சீ.வீ.கே.சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார்.   

Related Articles